5 வது தமிழர் பண்பாட்டு விழா

#வேர்கள்அறக்கட்டளையின் 5 வது தமிழர் பண்பாட்டு விழா 3 நாட்கள் வெகு விமர்சியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடனும் கலைகளை ரசித்து மகிழும் வகையிலும், மறந்து வரும் தமிழர் பண்பாட்டையும் கலைகளையும் மீட்கும் வகையிலும் வெகுவாக பாராட்டும் வகையில் அமைந்தது. நேற்று சுற்று வட்டாரத்தில் மழை பொழிந்துக் கொண்டிருந்த சமையம் வாணியம்பாடியில் நிகழ்வு முடியும் வரை வருண பகவான் தடையின்றி நடக்க வழிவிட்டார்.
தங்கள் முயற்சிகளுக்கு பஞ்ச பூதங்களும், எட்டு திசைகளும்,, தேவாதிதேவர்களும், சித்தர் மகான்களும் அருள் புரியட்டும்!
வாழ்க! வளர்க! உங்கள் தமிழ் தொண்டும், சமூக சேவையும்!
இயற்கையை காப்போம்!
அடுத்த தலைமுறைகளை வாழவிடுவோம்;
Designed and Developed By Creative Technologies