சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக 3 மாவட்ட துறை ரீதியான அலுவலர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மூன்று நாள் கருத்தரங்கம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எஸ் ஆர் டி பி எஸ் இல்லத்தில் செயல்பட்டு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது 40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இல்லத்தை பார்வையிட்டு சென்றனர்