#மனநலம் பாதிக்கப்பட்டு #மீண்டவர் மீண்டும் #குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு…
#எஸ் ஆர் டி பி எஸ் இல்லத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் பயனாளியாக இருந்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சர்தார் என்பவர் இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டு விட்டு வெளியேறியுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே சுற்றித்திரிந்த இவர் எப்படியோ தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு நம்மால் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார். உரிய மனநல சிகிச்சைக்குப்பின்னர் இவரை அவருடைய சொந்த ஊரான ஆந்திர மாநிலம் இந்துப்பூர் மாவட்டத்தில் உள்ள புலமதி என்ற கிராமத்திற்கு நேரடியாக சென்று கள விசாரணை செய்து இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வளர்மதி அவர்களின் முன்னிலையில் சர்தார் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு பாலாஜி மற்றும் எஸ் ஆர் டி பி எஸ் இயக்குனர் திருமதி தமிழரசி..
சர்தார் இறந்துவிட்டதாகவே நினைத்த குடும்பத்தினர் அவர் மீண்டும் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.