SRDPS இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா

SRDPS இல்லத்தில் சர்வதேச முதியோர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு வே.நல்ல சிவன் இ. ஆ. ப.அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட துணை நீதிபதி திருமதி.விஜயதாரணி அம்மா அவர்கள் முன்னிலை வகித்தார்.

மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.உமா (பொ ), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி. உமா மகேஸ்வரி, திரு. அருள் தாஸ்,குடும்ப நல மையம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதியோர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு கிரீடம் அணிவித்தும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பரிசு பொருட்கள் வழங்கியும், அவர்களை மன மகிழ்ச்சி செய்யும் பொருட்டு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதாக நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ குழுவினரின் மருத்துவ முகாமும் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நன்றி ஜெயின் கல்லூரி நாட்டு நல்லபணிதிட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு 
 
Designed and Developed By Creative Technologies